tamilnadu

img

தமிழகத்தை எதிரியாக பார்க்கிறார் மோடி சென்னை கூட்டத்தில் சுபாஷினி அலி சாடல்

சென்னை, ஏப். 12 -தமிழகத்தை மோடி எதிரியாக பார்க்கிறார்; அதனால்தான் தமிழகத்தை வஞ்சிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டி யனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்ஜிஆர் நகர், அடையாறு ஆகிய இடங்களில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுபாஷினி அலி பேசியதன் சுருக்கம் வருமாறு:மதச்சிறுபான்மையினர், பிற்படுத்தப் பட்டோர், தலித்துகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மநுதர்மத்தை கொள்கையாக கொண்டு செயல்படும் பாஜக அரசு, சமஉரிமை யை மறுக்கிறது. தமிழக மக்கள் சாதிய, சமூக கொடுமைக்கு எதிராக,சமூக நீதிக்காக போராடி வரு கிறவர்கள். அந்த பாரம்பரியத்தை பின்பற்றி பாஜகவை வீழ்த்துவோம்.மோடி அரசு அம்பானி, அதானி, பசு ஆகிய மூன்று பேருக்காக செயல்படுகிறது. அரசின் அனைத்து ஒப்பந்தங் களும் அம்பானிக்கு தரப்படுகிறது. சைக்கிள் பஞ்சர் கூட போடாத அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமான பழுதுபார்ப்பு ஒப்பதம் தரப்படுகிறது. அதானிக்கு காடுகள், விமான நிலையங்கள் தாரைவார்க்கப்படுகிறது.



இந்தி பேசினாலும் திணிப்பை எதிர்த்தேன்

1965ம் ஆண்டு சென்னையில் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் படித்துக் கொண்டு, பச்சையப்பன் கல்லூரி அருகே குடும்பத்தோடு வசித்து வந்தேன். நான் இந்தி பேசும் குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும், தமிழ் மாணவர்கள் தங்கள் மொழி உரிமைக்காக போராடியபோது நானும் பங்கேற்றேன். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து தப்பித்து ஓடிவந்த மாணவர்களுக்கு எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தேன். மாணவர்கள் கூட்டம் நடத்தும் இடமாக எங்கள் வீடு இருந்தது. இந்தி பேசுகிற குடும்பமாக இருந்தாலும், ஒருவர் மீது மொழியை திணிப்பது தவறான கொள்கை என்பதால் எதிர்த்தோம்.


சென்னை விமான நிலையத்தைக் கூட அதானிக்கு கொடுப்பார்கள் போல்தெரிகிறது. கேரளாவில் மாட்டுக்கறி யை ருசித்து சாப்பிடும் பாஜக தலைவர்கள், மற்ற இடங்களில் ‘அம்மா’என்கிறார்கள். உ.பி.யில் விவசாயி கள் பசுவை விற்க, வாங்க, பராமரிக்க முடியாமல் அவிழ்த்து விட்டுவிடு கின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் தருவதாக கூறினார். லட்சுமிஅம்மாவுக்கு அளித்தேன், கல்யாணிஅம்மாவுக்கு அளித்தேன் என்றெல் லாம் மோடி கதை சொன்னார். ஏழை,எளிய மக்களின் வீடுகளில் அந்தசிலிண்டர்கள் வீட்டின் ஒரு ஓரத்தில்சும்மா கிடக்கின்றன. பெண்கள் பழைய படி விறகு அடுப்பில் சமைக்கிறார்கள். ஏழைக் குடும்பங்களால் ஆயிரம் ரூபாய் கொடுத்து எப்படி மறு சிலிண்டரை வாங்க முடியும்?மோடி அரசு தமிழக மக்களை எதிரிகளைப் போல் நடத்துகிறது. நீட்தேர்வுக்கு எதிராக தமிழகமே போராடியபோதும், அனிதா என்ற குழந்தை தற்கொலை செய்து கொண்டபோதும் அதுகுறித்துப் பேச மோடிக்கு நேரமில்லை. ஒக்கி, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்திற்கு வராதபிரதமர் மோடி, இப்போது ஓட்டுக்காக அடிக்கடி வருகிறார்.


தமிழக விவசாயிகள் தண்ணீர் கேட்டும், விவசாய கடன் ரத்து செய்யக் கோரியும் தில்லியில் பலநாட்கள் போராடினர். அவர்களை சந்தித்துப் பேச மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை.இந்தி மொழியில் மோடியை ‘சோர்ஹை’ (திருடன்) என்று சொல் கிறார்கள். தமிழக மக்கள் தண்ணீர் இன்றி, விவசாயம் இல்லாமல், போதுமான உணவு கிடைக்காமல் அல்லல் பட்டபோது போதிய அரிசியை மோடி ஒதுக்கவில்லை. தமிழக மக்களின் சோற்றை திருடியவர் மோடி.மோடி அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இரண்டு முதலமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருப்பதால், மத்திய அரசுக்கு எதிராக போராட மறுக்கிறார்கள். வருமான வரி ரெய்டுக்கு பயந்து கூழைக் கும்பிடு போடுகின்ற னர். அதிமுக ஊழலால் மக்கள் அல்லல்படுகின்றனர். பெரியார், அண்ணா கொள்கைக்கு எதிரான பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எனவே, இந்த இருக்கட்சிகளையும் வீழ்த்துவோம். தமிழகத்தின் பாரம்பரியத்தை காப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.