சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்துபெண்கள் தலைமையில் மறியல் நடத்துவது என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம்தீர்மானித்துள்ளது.
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான், மாநிலப் பொருளாளர் பே.பேயத்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 23-ஆம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் கருப்புஉடை அணிந்து பெண்கள் தலைமையில் மறியல் நடத்துவது, இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாகப் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநிலத்தலைவர் என்.நாராயணன், பொதுச்செயலாளர் இ.மாயமலை தலைமையில் உள்ள சத்துணவு மற்றும்அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தை சத்துணவு ஊழியர் சங்கம் அங்கீகரிப்பது, ஜாக்டோ-ஜியோ “கோரிக்கை மீட்பு மாநாட்டில்” சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெரும் திரளாகப் பங்கேற்பதுஎன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.