districts

img

பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே செயல்படுத்திடுக! சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.11-  தமிழக அரசின் காலை உணவு திட்டத்தினை அனைத்து பள்ளிகளி லும் விரிவுபடுத்த வேண்டும், சத்து ணவு ஊழியர்களே காலை உண வையும் சமைத்து வழங்கிட வேண்டி  தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக சத்து ணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டச் செயலாளர் அஜய் ராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  ஒரத்தநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்க சாமி தலைமை வகித்தார். சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்  தலைவர் அறிவழகன் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்.  சேதுபாவாசத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் நாவலரசன் கலந்து கொண்டார். பேராவூரணியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழி யர் சங்க மாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் முத்துராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.  கும்பகோணத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக் கோட்டையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்றிய துணைத் தலை வர் ஏ.லோகநாதன் தலைமை வகித்  தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.விஜயா கோரிக்கை விளக்கி பேசி னார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.வீராசாமி பேசினார்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கோதையம்மாள் தலைமை வகித்  தார். மாவட்ட செயலாளர் வி.சி.குமார், மாநில செயற்குழு உறுப்பி னர் கே.வெற்றிச்செல்வி, அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பெண் ஊழி யர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யத் தலைவர் முத்துமாலா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட பொரு ளாளர் கிரேசி லில்லி, மாநில துணைத்  தலைவர் பெரியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.