tamilnadu

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை - சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிடும் சட்டத்திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் குற்றம் இழைப்பவர்களுக்கும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும், ஆசிட் வீச்சு மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

மேலும், பெண்ணை பின் தொடர்ந்தால் முதல் முறை 5 ஆண்டுகள் சிறையும், இரண்டாவது முறையும் பின் தொடர்ந்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை. ஆசிட் வீச முயற்சி செய்யும் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளது.