பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 இடங்களில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட 7 இடங்களில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதல் எஸ்.பி. தலைமையில் மாவட்டங்களில் சிறப்புக்குழு அமைக்கப்படும் பாலியல் குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு முன்விடுதலை கிடைக்காத வகையில் சிறைத்துறை விதிகள் திருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.