சென்னை,நவம்பர்.21- மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை வைத்து பிரசவம் பார்த்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் சென்னையில் வாட்ஸ் ஆப் தகவலை வைத்து மனைவிக்குப் பிரசவம் பார்த்த மனோகர் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.