tamilnadu

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டு,டிச.14- செங்கல்பட்டில்  ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இக்கல்லூரியில் மாணவிகள் தான் அதிக எண்ணிக்கையில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் செங்கல்பட்டு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து கடந்த டிசம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தியது. இதில் ரத்தசோகை, தொற்று நோய்கள் குறித்தான பரிசோதனைகள் நடத்தப்பட்டது.  கலைக்கல்லூரி முதல்வர் சிதம்பரம் வினாயகம் தலைமை தாங்கினார்.  முதல்வர் மருத்துவர் பாலாஜி, கலைக் கல்லூரி துணை முதல்வர் கிள்ளிவளவன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.