கிருஷ்ணகிரி, டிச. 26- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசூர் பெரியார் சர்க்கிளில் சூரிய கிரகணம் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. சூரியகிரகணம் ஒரு இயல்பான அறிய அறிவியல் நிகழ்வு அந்நேரத்தில் வெளியில் யாரும் வரக்கூடாது, உணவு அருந்தக் கூடாது போன்ற மூட நம்பிக்கைக்கு எதிராக சூரிய கிரகணத்தின்போது திறந்த வெளியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். சூரிய கிரகணம் நேரத்தில் சூரியனை வெறும் கண்ணில் பார்க்கக்கூடாது என்ப தற்காக பிரத்தியேக கண்ணாடி கொண்டு சூரியனை பார்க்க பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அறிவியல் விளக்க நூல்க ளும் வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் பேராசிரியர் சேதுராமன்,செயற்குழு உறுப்பி னர் சிவக்குமார், மாவட்டச் செயளாலர் பால கிருட்டிணன், நிர்வாகிகள் கண்மணி, முரு கேச பாண்டியன்,திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன், செயலாளர் பால கிருஷ்ணன், இளைய பெருமாள், தமுஎகச பெரியசாமி, வித் யூ அறகட்டளை கிருஷ்ண மூர்த்தி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புர வாளன்,இன்டியன் புக் சென்டர் தயாநிதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.