tamilnadu

ஆளுநர் மாளிகை முற்றுகை - கைது.... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி

1 ஆம் பக்கத் தொடர்ச்சி...

“கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான கொத்தடிமைகளை உருவாக்க 30-40 கோடி பேரை நிலமற்ற, வேலையற்றவர்களாக உருவாக்க ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 150 வருடங்களுக்கு முன்பு தொழிற்புரட்சி காலத்தில் ஸ்காட்லாந்தில் இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஒருவருடம் போராடி விவசாயிகள் அந்த சட்டத்தைமுறியடித்தார்கள். அதேபோன்று எத்தனை உயிர்கள் போனாலும், விவசாயிகள் சட்டத்தை முறியடிப்பார்கள்” என்றும் அவர் கூறினார்.

“பசுபாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுவந்துவிட்டு, 90 சதவீத தொழிற்சாலைகளுக்கான தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ஒழித்துவிட்டனர். புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய் அல்லது திருத்து எனதொழிலாளி வர்க்கம் போராடிக் கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு, பொருட்களின் விலைகளை குறைக்காமல் இந்தியபொருளாதாரம் மீண்டெழாது. எனவே, செத்தஎலியை போல மத்திய அரசை தூக்கி எறிவதற்கான போராட்டத்தை தொடர்வோம்” என்றார்.
போராட்டத்தில் எல்பிஎப் பொருளாளர் நடராஜன், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மற்றும் மு.சம்பத் (ஏஐடியுசி), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்) ஏ.எஸ்.குமார் (இடது தொழிற்சங்க மையம்), கிறிஸ்டினா சாமி(சுயாட்சி இந்தியா) உள்ளிட்டோர் பேசினர்.இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.