சென்னை:
தமிழக அரசு எத்தகைய இடையூறு கொடுத்தாலும் ஜனவரி 26 ஆம்தேதி டிராக்டர் பேரணி நடந்தே தீரும்என்று தலைவர்கள் அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.மின்சாரா திருத்தச் சட்டம்- 2020ஐகைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜன.23) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப் புக் குழு, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சின்னமலை அருகே நடைபெற்ற முற்றுகை பேரணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
300 மாவட்டங்களில் பேரணி
இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், ஜனவரி 26 அன்று அரசு சார்பில் நடைபெறும் குடியரசு தின அரசு விழா முடிந்ததும், ஒரு லட்சம் டிராக்டர்களுடன், 3 லட்சம் விவசாயிகள் தில்லிக்குள் புகுவார்கள். அன்றையதினம் நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் டிராக் டர் பேரணி நடைபெறும் என்றார்.
தடைகளை தகர்த்து...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் குறிப்பிடுகையில், “களப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும் பப்பெறும் வரை விவசாயிகள் வீடுதிரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் ஜனவரி 26 அன்று மாவட்டங்களில் நடைபெறும் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது. அவ் வாறு கலந்து கொண்டால் டிராக் டர்களை பறிமுதல் செய்வோம் என்று காவல்துறை மிரட்டுகிறது. சட்டத்தை ஆதரிக்க அதிமுகவிற்கு உரிமை உள்ளதென்றால், அதனை எதிர்த்து போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது” என்றார்.
“குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் அந்த டிராக்டர் பேரணிஅமைதியாக நடைபெறும். அமைதியை குலைத்தால் அதனால் ஏற்படும்விளைவுகளுக்கு காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும். அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எனவே, டிராக்டர் உரிமையாளர்களுக்கு காவல்துறை வழங்கிய நோட்டீசை திரும்ப பெறவேண்டும். தடைகளை தகர்த்து டிராக்டர் பேரணி நடந்தே தீரும்” என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டுப் போர்...
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “உள் நாட்டு போர் நடைபெறுவது போல்விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சட்டத்தை நிறுத்தி வைக்க முடியும் என்றால், அதனை ரத்து செய்யவும் முடியும்.எனவே, வேளாண் சட்டங்களைரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் உரிய பிரிவுகளை சேர்த்து, விவாதித்து சட் டத்தை நிறைவேற்ற வேண்டும். புதியவேளாண் சட்டங்கள் இல்லாவிட்டாலும் விவசாயிகள் உழைப்பார்கள், பிழைத்துக் கொள்வார்கள்” என் றார்.
தொடர்ச்சி 3 ஆம் பக்கம்...