சென்னை:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அந்த அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப் பட்டு வருகிறது. இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 16 ஆயிரத்து 359 கனஅடி உபரி நீரும் மழைநீரும் மேட்டூர் அணைக்குவந்து கொண்டிருக்கிறது.அணைக்கு வரும் தண் ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கட்கிழமை 72.69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் செவ்வாயன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 73.83 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.