tamilnadu

img

மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது: சிபிஎம் கண்டனம்

சென்னை:
சென்னை புத்தகக் கண்காட்சியில்  அரங்குஅமைத்திருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சி.யூ.ஜே. பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன்,  தமிழக அரசின் பல்வேறு ஊழல்முறைகேடுகளைத் தொகுத்து  புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கூட இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்.தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் மக்கள் செய்திமையத்தின் சார்பில் அரங்கு அமைக்கப் பட்டுள்ளது   அதில் அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்த புத்தகங்களும்  விற்பனைக்கு கிடைக்கின்றன. இதைப்பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசுஅவரை கைது செய்துள்ளது. அது மட்டுமின்றி புத்தக் கண்காட்சியில் உள்ள அவரது கடையை காலி செய்யவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகள்  உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செய்கின்றன.   அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளரை    மாநில அரசுஅச்சுறுத்துவதை  எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை உடனடியாக விடுதலைசெய்வதுடன், புத்தக கண்காட்சியில் அவரது புத்தக கடையை நடத்திட அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு  வலியுறுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.