tamilnadu

img

சுய உதவிக்குழு பெண்களிடம் கடனுக்கான தவணைத் தொகையை கேட்டு நிர்ப்பந்தம்

கள்ளக்குறிச்சி, மே 26- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் மகளிர்  சுய உதவிக்குழு பெண்களி டம் மாதாந்திர கடன் தவ ணையை செலுத்துமாறு நுண்நிதி நிறுவனங்கள் நிர்ப்  பந்திப்பதாக பெண்கள் வேத னையுடன் தெரிவித்துள்ள னர். கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அம லில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்கள்  வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதிப்பட்டு வரு கின்றனர். மத்திய, மாநில  அரசுகள் “மக்கள் தங்களைத்  தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” எனக்கூறி கைகழுவி விட்ட சூழலில் தினசரி ஒரு வேளை  உணவிற்கே பிறரின் உத வியை எதிர்பார்க்க கூடிய சூழ்நிலையில் பலர் உள்ள னர்.

பொதுமுடக்கம் காலத் தில் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் வாங்கிய கடன் தவணையை மூன்று மாத காலத்திற்கு செலுத்தத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடன்  தவணையை செலுத்துமாறு வங்கிகளோ, நுண் நிதி நிறு வனங்களோ யாரையும் நிர்ப் பந்திக்கக் கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றுள்ளவர்களை தவணை தொகையை செலுத்துமாறு கைபேசி  மூலமாகவும், முகவர்கள்  மூலமாகவும் நிர்பந்தம்  அளிப்பதாக பாதிக்கப்பட்ட  பெண்கள் தெரிவிக்கின்ற னர். மேலும் கொரோனா நிவா ரணமாக தமிழக அரசு அளித்த தொகையிலும், மத்திய அரசு விவசாயி களுக்கான நிதியை வங்கி களில் செலுத்தும் தொகை யிலும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்  தொகையை பராமரிக்க வில்லை எனக்கூறி அவர்கள் கணக்குகளிலிருந்து அரசு டைமை வங்கிகள் சில வற்றில் நூற்றுக்கணக்கான ரூபாய்களை பிடித்தம் செய் யும் நிலையும் உள்ளது.

எனவே குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கவில்லை எனக்  கூறி நிவாரணத்தில் பிடித்தம்  செய்யும் நடைமுறையை யும், நுண் கடன் நிதி நிறு வனங்கள் ஊரடங்கு காலத்தில் கடன் தவ ணையை திருப்பிக் செலுத்து மாறு நிர்ப்பந்திப்பதையும் மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையிட்டு தடுத்திட வேண்டுமென பாதிக்கப்பட்டோர் வலி யுறுத்தியுள்ளனர். குறிப்பாக திருக்கோவி லூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், உளுந்தூர்பேட்டை பகுதி யில் மல்லிகா, உடையா னந்தல், மட்டிகை, பாண்டூர், சேந்தநாடு, மாரனோடை, சிறுநாகலூர், மதியனூர், ஒரத்தூர் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் இப்ப டிப்பட்ட நெருக்கடிகள் தரப்  படுவதாக பொதுமக்கள் கூறு கின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் உளுந் தூர்பேட்டை காவல் நிலை யத்தில் சுய உதவிக்குழுக் களை சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது.