சென்னை:
யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன் சில் உத்தரவு பிறப்பித்துள் ளது.கொரோனா தொற்று காலத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பல் வேறு தரப்பினரும் கோரிக் கைகள் முன்வைத்து வருகின்றனர்.
தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஏராளமான புகார்கள் வந்தவண் ணம் உள்ளன. இதையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மாணவர்கள் தேர்வு தொடர் பான புகார்களை சம்பந் தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு தேர்வுகளை எப்போது நடத்துவது என்கிற வரையறையினை வகுத் துள்ளதால் அதை பின்பற்றி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.