tamilnadu

img

பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்... 

நாட்டின் 75வது சுதந்திரதினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் தமிழ்நாடு புதுச்சேரி  பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை தென்மண்டல நிர்வாக இயக்குநர் சைலேந்திரா ஏற்றிவைத்தார். பின்னர் 10 அரசு பள்ளிகளில் சிறப்பாக படித்த 10 பெண் குழந்தைகளுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். நாடுமுழுவதும் சுதந்திர தினத்தன்று  அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ரூ.2.5கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.