சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி, வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.