உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாமல்லபுரத்தில் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்நிலையில் சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமிழகத்துக்கு வருகை தருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மதுரையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக அவர் தமிழகம் வருகை தருகிறார் என தெரிகிறது. ரஷ்ய அதிபர் புடினுடன், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.