tamilnadu

டாஸ்மாக் ஊழியர்களுக்கு  ரூ.500 சம்பளம் உயர்வு....

சென்னை:
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க கள்ளச்சாராயம் காட்சிகள் மற்றும் கலை மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திரும்பி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  அமைச்சர் செந்தில்பாலாஜி  கூறினார்.சட்டப்பேரவையில் தனது துறைமீதான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய  அவர்,  மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6767 மேற்பார்வையாளர்கள் 12 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள் 3158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 95 சில்லரை விற்பனை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள் இந்த பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூபாய் 500 கூடுதலாக ஏப்ரல் 2001 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் நிதி கூடுதல் செலவாகும் என்றார்.