சென்னை:
கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் குடும்பத்திற்கும் நிதி
கொரோனா முன்கள பணியில் 9 வருவாய்த்துறை அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.