சென்னை, மார்ச் 7 -
லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி மற்றும் அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கணக்கில் காட்டாத பணம், போலியான வருவாய் கணக்கு, போலி கணக்குகளில் பண வரவு போன்றவை தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.