tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க கோரி கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம். நவ, 18- விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 6க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களை விழுப்பு ரம் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளிக்கச் சென்றனர். அவர்களை ஆட்சியரை  சந்திக்க விடாமல் தடுத்த காவல் துறையி னர் அனைவரையும் கைது செய்து திரு மண மண்டபத்தில் அடைத்தனர். இதில் பெண்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு  கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்  களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில் உளுந்தூர்பேட்டை வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள டி.கொளத்தூர், பெரிய செவலை, சரவணப்பாக்கம், மடப்பட்டு, கருவேப்பிலைப்பாளையம், சிறுத்தனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திங்களன்று (நவ. 18) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர்.  அவர்களை காவல்துறையினர் தடுத்த தால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர்  காவல் துறையினர் சுமார் 500 பேரை கைது  செய்தனர். இதில் சரவணப்பாக்கம் கிரா மத்தைச் சேர்ந்த வள்ளி (35), பட்டம்மா (45),  அய்யம்மாள் (50), பெரியசெவலை கிரா மத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (45) ஆகியோருக்கு அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் தனி யார் திருமண மண்டபத்தில் அடைத்து  வைக்கப்பட்டனர். அங்கே காவல் துறையினர்  வழங்கிய மதிய உணவை புறக்கணித்து, ஆட்சியரிடம் மனு அளித்தால்தான் சாப்பிடு வோம் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து ஒரு குழுவினர் மட்டும் சென்று மாவட்ட ஆட்சியர் அண்ணா துரையிடம் மனு அளித்தனர்.