tamilnadu

தேநீர், நடைபாதை உணவகங்கள், சலூன் கடையை திறக்க கோரிக்கை...

சென்னை:
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தேநீர், நடை பாதை உணவகங்கள் (பார்சலுக்கு மட்டும்), சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு  நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவைப்பின் மாநிலத் தலைவர் செ.பால் பர்ணபாஸ் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாறி, மாறி அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில் அனைத்து சிறு, குறு தொழில்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேநீர், நடைபாதை உணவகங்கள் (பார்சலுக்கு மட்டும்) மற்றும் சலூன் கடைகளை மட்டும் தொடர்ந்து திறக்க அனுமதி மறுத்து வருவது ஏற்புடையதல்ல.ஏற்கனவே, கடைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் கடை வாடகை, தொழிலாளர்களுக்கான சம்பளம், மூடப்பட்டிருந்த கடைகளுக்கான தண்ணீர் வரி, மின்சார கட்டணம் என செலவினங்கள் தேநீர்,நடைபாதை உணவு கடைகள் (பார்சலுக்கு மட்டும்) சலூன் கடை உரிமையாளர்களின் கழுத்தை நெரித்து வருகிறது.எனவே, தற்போதைய சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தேநீர், நடைபாதை உணவு கடைகள், சலூன் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்து உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும்.