திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தை பிரித்து, பெரணமல்லூரை தலை மையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய வட்ட மாகும். 8 பிர்காக்களை (குறுவட்டங்களை) உள்ளடக்கி 161 வருவாய் கிராமங்கள் உள்ளது. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டதாகும். இதில் பெரணமல்லூர் ஒன்றியம் மிகப்பரந்த பகுதி யாகும். சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். பெரணமல்லூருக்கும், வந்தவாசிக்கும் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால் அலுவ லக பணிக்காக பொதுமக்கள் வந்தவாசிக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வரைக்கும் சட்டமன்ற தொகுதியாக இருந்த பெரண மல்லூரில், மத்திய மாநில அரசுகளின் பல துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகி றது. எனவே வந்தவாசி வட்டத்தைப் பிரித்து, பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என்றுஅனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.