தஞ்சாவூர், ஜூலை 23- தமிழ்நாடு அறிவியல் இயக்க வளர்ச்சி உபக்குழுவின் மாநில மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. மாநாடு துவக்க விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் முருகன் வரவேற்று உரை யாற்றினார். அகில இந்திய அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேரா பொ.இராஜமாணிக்கம் மாநாட் டினை துவங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். ‘இயற்கை வள மேம்பாட்டில் தமி ழகம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாநில கருத்தாளர்கள் பி.கே.ராஜன், வி.சேது ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கி னர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடை பெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த அறி க்கையை மாநில ஒருங்கிணைப்பாளர் கள் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், வெ. சுகுமார் ஆகியோர் சமர்ப்பித்தனர். அறிவியல் இயக்க மாநில பொதுச்செய லாளர் அ.அமலராஜ் நிறைவுரையாற்றி னார். செஸ்டாஸ் இயக்குனர் எல்.பிரபா கரன், செட் இயக்குனர் பாத்திமாராஜ், மாநில பொருளாளர் எஸ்.சுப்பிரமணி, மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், தியாகராஜன், நாராயணசாமி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். வளர்ச்சி உபகுழு உறுப்பினர்கள் ஞானசேகரன், பொன்முடி, வீரமுத்து, மனத்துணை நாதன், நவநீதகிருஷ் ணன், இராஜேந்திரன் ஆகியோர் மாநாட்டினை ஒருங்கிணைத்தனர். தஞ்சை நகர கிளைச் செயலர் வி.கே. மோகன் நன்றி கூறினார். கூட்டத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட் டங்களை மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமாக கைவிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.