சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க கோரிக்கை
சென்னை மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட சைனா பஜார் (என்.எஸ்.சி போஸ் சாலை) பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட சாலையோரக் கடைகளை மீண்டும் அதே பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னை மாநகர சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் இந்த மனுவை வழங்கினர். கூட்டமைப்பின் துணைத் தலைவர் மணி, நகர விற்பனைக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
