சென்னை:
சத்துணவு ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து பாதுகாப்பு உபகரணங் களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச் செயலாளர் அ.நூர்ஜகான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று முதல் அலை காலத்தில் நோயாளிகள் கணக்கெடுப்பு பணி, செக்போஸ்ட் பணி மற்றும் இதர பணிகளுக்கு சத்துணவு ஊழியர்கள் ஒரு சில மாவட்டங்களில் எந்தவித பாதுகாப்பும் இன்றி கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டதோடு திருவண்ணாமலை, நாகப்பட்டினம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டன,அதில் திருவண்ணாமலை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அமைப்பாளர்கள் தங்களது சொந்த பணத்தில் உணவு தயாரித்து வழங்கிய, அந்த தொகையினை இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்தது.மேலும் தற்போது திருச்சி. ஈரோடு, திருப்பூர். எந்தவித பாதுகாப்பும் அதற் கான உபகரணமும் வழங்கப் படாத நிலையில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துதல் என்பது பெண் ஊழியர்கள் மிகவும் பயப்படுகின்ற சூழ்நிலையில் செயல்பட்டு வருவதால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு உபகரணங் கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது.
எனவே சத்துணவு ஊழியர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்து அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டுமாறு தமிழக முதல்வரை தமிழ்நாடு சத்துணவு சங்க மாநில மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.