tamilnadu

img

சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கம்: வானிலை ஆய்வு மையம்  

சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்வதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.  

சென்னை – வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 70.9 செ.மீ., மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.