சென்னை, நவ. 6 - ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரி நவம்பர் 13 ஆம் தேதி தில்லியில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
ஒன்றிய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்கள் பல இணைந்து ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்சிசிபிபிஏ) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதனன்று (நவ.6) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறுகையில், “12 கோடி மூத்த குடிமக்கள் ரயில் கட்டணச் சலுகையை பெற்று வந்தனர். இதை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
2026 ஜனவரி மாதம் முதல் 8 ஆவது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு அமலுக்கு வர வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ஊதியக் குழுவையே அமைக்காமல் உள்ளது. எனவே, விரைந்து ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்.
மருத்துவப்படியை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நவம்பர் 13 அன்று தில்லியில் தர்ணா நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தர்ணா
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றில் உள்ள 8 ஓய்வூதியர் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பு சார்பில், 1.1.2017 முதல் 15 விழுக்காடு உயர்வுடன் ஓய்வூதியத்தை வழங்கக் கோரி தர்ணா நடைபெறுகிறது.
உணவுப்பொருள் கடத்தல்: 9000 வழக்குகள் பதிவு
மாமல்லபுரம்,நவ.6- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி, கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பணிகள் காரணமாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது தாமதமானது. தற்போது, அனைத்துப் பகுதியிலும் உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளதால், நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
அரிசிக் கடத்தலை தடுப்பதற்கு டிஜிபி-யான சீமா அகர்வால் தலைமையில் 4 எஸ்பி-க்கள் கொண்ட 500 பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். இதில் குறிப்பாக, கேரளா மாநில எல்லையோர 13 மாவட்டங்கள், ஆந்திரா மாநில எல்லைப் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரிசிக் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில், உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 28 ஆயிரத்து 802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடத்தல் சம்பவம் தொடர்பாக 9 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 72 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை,நவ.6- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க ஆணைகளை செயல்படுத்த ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மாநில அரசு விரைவில் “தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்த உள்ளது.
முன்கணிப்பு கொள்கை உருவாக்கம், திறன் மேம்பாடு, திறன் மற்றும் கல்வி, சமூக ஒத்துழைப்பு, ஸ்டார்ட்-அப்களை ஈடுபடுத்துதல், புத்தாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்கை நுண்ணறிவு கிடைப்பதை எளிதாக்குவது மூலம் கணக்கீடு மற்றும் சேமிப்பிற்கான உள்கட்டமைப்பை வழங்குதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னணி கல்வி நிறுவனங் களின் உறுப்பினர்கள், செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்த தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் இணைக்கப்பட்ட தொழில் துறையைச் சேர்ந்த முன்னணி நபர்கள் இருப்பார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக நிலை நிறுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும்
சென்னை,நவ.6- தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமையன்று (நவ.7) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (நவ.8) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.9 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
மேலும் நவம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரைக்கும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘போன்பே’ பெயரில் மோசடி
சென்னை,நவ.6- மோசடியாக போன்பே செயலியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய் யும் நிறுவனத்தை முடக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது.
போன்பே நிறுவனத்தின் பெயரை தவறாக பயன் படுத்தி சிலர் பண பரிவர்த்த னை செய்வதாக போன்பே நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர் ந்தது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள், சம்பந்தப் பட்ட பணப்பரிவர்த்தனை கான யூ.ஆர்.எல். கணக்கு ஐடியை ஒன்றிய அரசுக்கு போன்பே நிறுவனம் தர வேண்டும். தொடர்ந்து பணப் பரிவர்த்தனை செய்யாத வகையில் யுஆர்எல் கணக்கு ஐடியை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். எந்த நிறு வனம் பண மோசடியில் ஈடு பட்டது என உறுதி செய்ய ப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
நவ.14 முதல் கூட்டுறவு வார விழா
சென்னை,நவ.6- 71 ஆவது அனைத்திந் திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பல் வேறு தலைப்புகளில் தமிழ கம் முழுவதும் உள்ள கூட்டு றவு நிறுவனங்களில் நடை பெறுகிறது.
இதுதொடர்பாக, கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்க, தகுதி யான சங்கங்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி யுள்ளன.
இதற்கான படிவங்கள் கூட்டுறவு சங்கங்களின் பதி வாளரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சங்கம் அல்லது வங்கி யை தேர்வு செய்து, கூட்டுறவு பதிவாளருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை, நவ.6- சென்னை உயர் நீதி மன்றத்தில் புதிதாக மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன் சிலின் நீண்டகால உறுப்பி னர் கே.சந்திரமோகன் மற்றும் வழக்கறிஞர் எம்.சுரேஷ் குமார் ஆகியோர் புதிய கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கே.சந்திரமோகன், அரியலூர் தொகுதி காங்கி ரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர். கருப்பையாவின் மகன் என்பதும், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் என்ப தும் குறிப்பிடத்தக்கது. எம். சுரேஷ்குமார் தந்தை முத்தையா, மாவட்ட நீதிபதி யாக பணியாற்றி ஓய்வுபெற் றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு
இராமேஸ்வரம், நவ.6- இராமேஸ்வரத்தி லிருந்து மீன் பிடிக்கச்சென்ற 16 பேரை இலங்கை கடற் படையினர் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர். இவரது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 16 மீனவர்களுக்கும் நவம் பர் 20 வரையிலும் இரண்டா வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தர விட்டார். இதையடுத்து, மீன வர்கள் 16 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.