tamilnadu

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை:
தமிழகத்தில் சேலம், மதுரை, கடலூர் உள்பட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர்ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.