tamilnadu

img

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 16- தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2  நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டு க்கல், தேனி,விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. ஜூன் 18 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத் தூர், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.