tamilnadu

img

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வட தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,தென்காசி,  திருப்பூர்,  ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு,திண்டுக்கல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,தென்காசி,  திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி மற்றும் திருவண்ணாமலை, பெரம்பலூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) நாட்றம்பள்ளி, வானூர், கொடுமுடி, திருவள்ளூர் தலா 8, திருப்புவனம், ஈரோடு, போளூர் 7 தலா, கவவை, பண்ருட்டி, விருதாச்சலம், திருப்பத்தூர் தலா 6, செய்யாறு, உளுந்தூர்பேட்டை, வீரகனூர், சேலம், வெப்பாக்கம் தலா 5, திருப்பத்தூர், ஓமலூர், கங்கவல்லி, நன்னிலம், மலாளத்தூர், சங்கராபுரம், திண்டிவனம், ஒகேனக்கல், பாலக்கோடு தலா 4, ஆரூர், குறிஞ்சிப்பாடி, கீழ்பென்னாத்தூர், கடலூர், காஞ்சிபுரம், குமாரபாளையம், வந்தவாசி 3 தலா, ஆத்தூர், திருத்தணி, சிதம்பரம், பேச்சிப்பாறை, காட்பாடி தலா 2, தக்கலை, வால்பாறை தாலுகா அலுவலகம் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

லட்ச தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிப் கடல் பகுதிகள், மன்னால் வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40  முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.05.22: லட்ச தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிப் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று  மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.