tamilnadu

img

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜன.22-  வெனிசுலாவின் சுதந்திரத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நட வடிக்கையைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெனிசுலா அதிபர் தோழர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவி சிலியா புளோராவையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சாலை - ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் இரா. அந்தோணி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சீனிவாசன், நிர்வாகி மதிவாணன், ஏஐடி யூசி கௌரவத் தலைவர் வி. எஸ்‌. அபி ஷேகம், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் புருஷோத்தமன், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சிவகுமார், என்டிஎல்எப் மாநிலத் தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.