tamilnadu

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட முன்வடிவுகளை அறிமுகம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை அறிமுகம் செய்தார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, B.N.S. மற்றும் B.N.S.S. சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும் தமிழ்நாடு 1998-ஆம் ஆண்டு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைத்தார்.