திருச்சூர்,ஜனவரி.10- பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் சுமார் 16,000க்கும் மேற்ற்ப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். 80 வயதான இவர் கல்லீரல் நோய் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.