உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜமா மசூதி அருகே உள்ள கிணற்றில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜமா மசூதிக்கு முன் இருக்கும் கிணற்றுக்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் உரிமை கொண்டாடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், கிணற்றை ஆய்வு செய்ய வழங்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஷாஹி ஜமா மசூதி அருகே உள்ள கிணற்றில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.