tamilnadu

img

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைத்து அரசாணை வெளியீடு!

ஆணவக் படுகொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஆணவக் படுகொலைகளை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 
சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை 3 மாதங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.