மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கடலூர் மாவட்ட மல்லர் கம்பம் கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் போட்டி ஜான் டூயி தனி யார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் வீர தாஸ், தமிழ்நாடு மல்லர் கம்ப கழகத் தலை வர் ஜனார்த்தனன், விக்கி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மல்லர் கம்ப மாவட்ட தலைவர் என். ராமச்சந்திரன், மாவட்ட துணை தலை வர் ஜி. அசோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிதின், ஜோஸ்வா, கிரிதரன், சுரேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். மல்லர் கம்ப மாவட்ட நிர்வாகிகள் பி.கார்த்திக், பி.மணிபாலன், எஸ்.கலை வாணன், எஸ்.பாபு, பி.புருஷோத்தமன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் வி. கோபிநாத் நன்றி கூறினார்.