தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் வாரிய லாரிகள் மற்றும் ஒப்பந்த லாரிகள் மூலமும், தனியார் லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் லாரிகள் தண்ணீர் எடுக்கச் செல்லும் போது அவர்கள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமம், அரசு அனுமதி உள்ளிட்டவை தொடர்பாக, தொடர்புடைய பகுதிகளின் மக்கள் கேள்வி எழுப்புவதால் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், லாரி ஓட்டுநர்கள் மீது பொய்யான வழக்குகள் போடப்படுவதாகவும் தனியார் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தங்கள் பணியை அதிகார பூர்வமாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வாரிய லாரிகள் மற்றும் ஒப்பந்த லாரிகள் வழக்கம் போல் செயல்படும்.