கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோட நாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வழக்கை விசாரிக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார். கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், வழக்கு தொடர்பான சயான், மனோஜ் ஆஜரானார். இதையடுத்து , அரசு தரப்பில், புலன் விசாரணை நடத்த அவகாசம் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.