காஞ்சிபுரம், மே 13 - கொடிய விஷப்பாம்பு கடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அகால மரணமடைந்தார். சிபிஎம் காஞ்சிபுரம் நகர 46 வது வட்ட மோட்டூர் கட்சி கிளை உறுப்பினராகவும், உழைக்கும் பெண்கள் அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தவர் தோழர் கலைச்செல்வி(44). மே 8 இரவு அன்று வீட்டில் படுத்திருந்த கலைச்செல்வியை பாம்பு கடித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று (மே 12) அகால மரணமடைந்தார். காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார்,மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி, நகர செயலாளர் சி.சங்கர், கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் கே. ஜீவா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பாலாறு அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தோழர் கலைச்செல்வியின் கணவர் பிரகாசம் கட்சியின் முன்னணி ஊழியராக உள்ளார்.