காஞ்சிபுரம், ஜூன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப்பின் மகள் எஸ்.எம். ஆயிஷா (எ) வேணுப்பிரியா உடல்நலக் குறைவால் சனிக்கிழமையன்று (ஜூன் 20) அகால மரண மடைந்தார். அவருக்கு வயது 27. காஞ்சிபுரம் திருமலை நகரில் வசித்து வந்த வேணுப்பிரியா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், நகரச் செயலாளர் சி.சங்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஞாயிறன்று (ஜூ 21) தாயாரம்மன் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரராஜன், எஸ். கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் அனீப்பிற்கு ஆறுதல் கூறினார்.