சென்னை:
நியூஸ்7 தொலைக்காட்சி யின் ஒளிப்பதிவாளர் மறைவுக்கு டியூஜே மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன் அவரது குடும்பத்துக்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த இளம் ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் (33) சென்னையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்த யுவராஜ் பிரபாகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டியூஜே மாநில மையத்தின் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மறைந்த பத்திரிக்கையாளரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.நியூஸ் 7 நிறுவனமும் சட்டப்பூர்வ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.