சென்னை:
எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு முதலாமாண்டு நாவல் போட்டியில் குதிப்பி, ஞாயிறு கடை உண்டு, மெக்ஸிக்கோ ஆகிய நாவல்கள் பரிசுக்குரிய சிறந்த நாவல்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.குதிப்பி நாவலை எழுதிய ம.காமுத்துரை, ஞாயிறு கடை உண்டு நாவலை எழுதிய கீரனூர் ஜாகீர்ராஜா, மெக்ஸிக்கோ நாவலை எழுதிய இளங்கோ ஆகியோர் இந்த பரிசுகளை பெறுகிறார்கள். பரிசு பெறும் மூன்று நாவலாசிரியர்களுக்கும் ரூ.30ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தேர்வான நாவல்கள் தவிர 10க்கும் மேற்பட்ட நாவல்கள் நடுவர் குழுவினரால் சிறப்பானவை என கண்டறியப்பட்டுள்ளன. ந.முருகேசன் பாண்டியன், அ.ராமசாமி,கே.வி.ஷைலஜா, பாஸ்கர் சக்தி, பி.என்.எல்.பாண்டியன், மு.வேடியப்பன் ஆகியோர் பரிசுக்குரிய நாவல்களைத் தேர்வு செய்தனர்.டிஸ்கவரி புக்பேலஸ், பிரபஞ்சன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நாவல்போட்டியை ஒருங்கிணைத்தன.