முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை இன்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்.12 முதல் பிப்.20 வரையிலான காலங்களில் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் பிப்.12 ஆம் தேதிமுதல் பிப்.15 ஆம் தேதிவரை 4 நாட்களுக்கு இருவேளைகளிலும் கணினி வழித்தேர்வு நடத்தப்படும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் யூசர் ஐடி, கடவுச்சொல் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஆங்கிலம், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும்.
அதனைதொடர்ந்து பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ், பிப்ரவரி 13 ஆம் தேதி வணிகவியல், மனை அறிவியியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல், பிப்ரவரி 14 ஆம் தேதி புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல், பிப்ரவரி 15 ஆம் தேதி தாவரவியல், உயிர் வேதியியல், விலங்கியல், உடற்கல்வி இயல் தேர்வுகள் நடைபெறும்.