சென்னை, மே 15- அனைத்திந்திய அஞ்சல் தபால் ஊழியர் சங்கத்தின் 30வது கோட்ட மாநாடு அண்மையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்டத் தலைவர் எஸ். ஜெயப்ரகாஷ்
தலைமை தாங்கினார். முன்னாள் கோட்ட செயலாளர்கள் சிவகுருநாதன், புருஷோத்தமன், அஞ்சல்3 வடசென்னை கோட்டசங்கத்தின்முனனாள் தலைவர் ஏ.மணி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
அனைத்திந்திய அஞ்சல்தபால் ஊழியர் சங்கத்தின்கோட்டத் தலைவராக டி.ராஜன், கோட்ட செயலாளராக கே.சந்திர மோகனகிருஷ்ணன், பொருளாளராக டி.பாஸ்கர் உள்ளிட்ட 12 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்புதிய தொழில் நுட்பத்தால் உருவான பல பிரச்சனைகளை தபால்காரர்கள் சந்திக்கவேண்டி இருக்கிறது. இதற்கு தீர்வு காணவலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.