tamilnadu

img

காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல்!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று(16.04.2025) நடைபெற்றது. அப்போது விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.கீதாஜீவன், சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதாவது, அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும் எனவும், தமிழ்நாடு பள்ளிகளில் சத்துணவுக் குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகை ரூ. 61 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.