தருமபுரி செங்கொடிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட பொருளாளர் பி.ராஜம்மாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, த.தீ.ஒ.முன்னணியின் மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் என்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.