சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ்):
பாரம்பரிய பண் பாட்டின் அம்சமாக இருக்கும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய தமிழ்ச் சமுதாயம் இன்றைக்கு பல்வேறு இன்னல் களை எதிர்நோக்குகிற வகையில் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழ் மக்கள் படுகிற துன்பத்திலிருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாகும்.
வைகோ(மதிமுக):
உழவர் கள் தாங்கள் உயிராகப் போற்றும் நிலத்திற்கும், கால்நடைச் செல் வங்களுக்கும் நன்றி பாராட்டுகின்ற வகையில்,எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப் பொங் கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்.கி.வீரமணி(திக): தமிழ்ப் புத்தாண்டான தை பிறந்தது; பொங்கலோ பொங்கல் என்று நம்மக்கள் முழங்கி, மகிழ்ச்சியில் திளைப்பதுடன், துன்பங் களைந்து, பிரச்சினைகளை பகுத்தறிவால் எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் வாழ்வாக புதிய சமூகம் காணும் புத்தாண்டு அமையட்டும்!
இரா. முத்தரசன்(சிபிஐ):
தமிழர் தம் இன்பத் திருநாளாம்- தைத் திருநாளில் வெண்பனி சூழ, கரும்பு, நெற்கதிர்கள், மஞ்சள் வாழை, மாவிலை தோரணங்கள், உழவர் தனம் காளைகள், புதுக்கோலம், புதுப்பானை பொங்கல் என மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் நன்நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தொல். திருமாவளவன் (விசிக):
இந்தியாவில் மதச் சார் பற்ற ஒரே திருவிழா தமிழர் திருநாள்தான். அத்தகைய புரிதலோடு இவ்விழாவில் மக்களோடு இணைந்து பங்கேற்க வேண்டுகிறேன். தமிழினத்தின் பெருமைமிகு தனிப்பெரும் திருவிழாவாம் பொங்கல் திருநாளில் உலகத் தமிழ்மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காதர் மொகிதீன்:
‘தை பிறந் தால் வழி பிறக்கும்’ என்னும் தமிழ்ச் சொல்லிடையே, தைத் திங்கள் முதல்தான் தமிழ்ப் புத்தாண்டு பூக்கிறது என்பதற்குரிய உள்ளரைச் சான்றாகும். நாளைய வரலாற்றில், வையகம் முழுவதிலும் பரவியிருந்த தமிழ்மொழி, மீண்டும் அதன் தொன்மைச் சிறப்பையும், பெருமையையும் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தை பிறக்கிறது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.தமிமுன் அன்சாரி, பாரிவேந்தர் எம்.பி., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் பொங்கல் வாழ்த்துக் களை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில்,“தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள் வெறும் சடங்குகள் அல்ல. நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த தத்துவங்கள் அவை. அறிவியல் வளராத அக்காலத்திலேயே உலகின் இயக்கத்துக்கு கதிரவன் இன்றியமை யாது எனும் உண் மையை உணர்ந்த தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த திருநாளைக் கொண்டாடுவது நம் அறிவியல் அறிவினை உலகுக்கெல்லாம் எடுத்துக் காட்டக்கூடிய ஒன்றாகும்.தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நமது பழமொழி. எனவே, இந்த தைத் திங்கள் பிறப்பு, முட்டுக்கட்டைகள் நீங்கி, நம் மாநிலத்துக்கு வளர்ச்சியையும், மக்களுக்கு செழிப்பினையும் நிச்சயம் அளிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.