சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பியின் மூத்த சகோதரி பானுமதி என்கிற வான்மதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர். அவர், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை (ஆக.5) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதியின் மறைவுக்கு மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.