சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயில் அருகே சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது வீட்டில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இன்று பிரேம்குமார் தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.
அப்போது விஷவாயு தாக்கி பிரேம்குமார் மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது மகன் பிரவீன்குமார் மற்றும் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
இதில் பிரேம்குமார், பிரவீன்குமார் மற்றும் பிரமோத் ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட சாரநாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.